சைடு பாரில் பொதுப் பின்னூட்டப் பெட்டி [side bar comment box]

Tuesday, February 9


ங்கள் வலைப் பக்கத்தைப் படிக்கும் நண்பர்கள் சுலபமாக பின்னூட்டமிட வேண்டும் என்றால் பிலாக்கர் தரும் பின்னூட்டப் பெட்டியை தெரிவு செய்து வைத்திருப்பீர்கள்.
பிலாக்கரின் செட்டிங்க்ஸ் பகுதியில் கமெண்ட்டை கிளிக் செய்து பார்த்தால் மூன்று வித ஆப்ஷன்ஸ் இருக்கும்

சிலர் பாப் அப் விண்டோ வாகவும் சிலர் ஃபுல்பேஜ் அமைப்பிலும் பெரும்பாலானவர்கள் வேர்ட் பிரஸ் தளம் போன்ற embedded form அமைப்பிலும் வைத்திருப்பர்.இது ஒவ்வொரு இடுகைக்கும் தனித் தனியானதாக இருக்கும்.அப்படியில்லாமல் நாம் படிக்கும் வலைப் பக்கத்தின் எந்த ஒரு இடுகையைப் பற்றியும் அல்லது மொத்தமாக அப்பக்கத்தினைப் பற்றியும் பொதுவாகப் பின்னூட்டமிடவும் முடியும்.அதற்கான ஒரு பின்னூட்டப் பெட்டியை கூகிள் ஃபிரண்ட் கனக்ஷனுடன் நம் பிலாக்கர் பக்கத்தின் சைடு பாரில் நிறுவிக் கொள்ள முடியும்.

சைடு பாரில் பொதுப் பின்னூட்டப் பெட்டி எப்படி நிறுவுவது?


அதற்கு முதலில் நாம் கூகிள் பாலோயர்ஸ் காட்ஜெட்டை நிறுவியிருக்க வேண்டும்.ஏனெனில் நம் வலைப்பக்கம் அல்லது 'சைட்' டுக்கான அடையாள எண்ணை அதிலிருந்துதான் பெறமுடியும்.
இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.தெரியாதவர்கள் லே அவுட் பகுதிக்குச் சென்று add a gadget கிளிக் செய்து கிடைக்கும் pop up box ல் followers gadget ஐ சேர்த்துக் கொள்ளவும்.

பின் உங்க பிலாக்கின் முகப்பில் உள்ள View கிளிக் செய்து Page Source ஓபன் செய்யுங்கள்.
அந்தப் பக்கத்தில் Ctrl+F செய்து கிடைக்கும் Find பாக்ஸில் site: என்று டைப் செய்தால் "xxxxxxxxxxxxxxxxxxxx"என்ற ஒரு பெரிய[BIG_NUMBER]
20 இலக்க எண் கிடைக்கும். அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்க பிலாக்கின் லே அவுட் சென்று add a gadget கிளிக் செய்து add html/javascript ஓபன் செய்து கீழ் வரும் ஜாவா ஸ்கிரிப்டைச் சேர்க்கவும்.


<!-- Include the Google Friend Connect javascript library. -->
<script type="text/javascript" src="http://www.google.com/friendconnect/script/friendconnect.js"></script>
<!-- Define the div tag where the gadget will be inserted. -->
<div id="div-comment-wall" style="width:210px;border:1px solid #cccccc;"></div>
<!-- Render the gadget into a div. -->
<script type="text/javascript">
var skin = {};
skin['BORDER_COLOR'] = '#cccccc';
skin['ENDCAP_BG_COLOR'] = '#e0ecff';
skin['ENDCAP_TEXT_COLOR'] = '#333333';
skin['ENDCAP_LINK_COLOR'] = '#0000cc';
skin['ALTERNATE_BG_COLOR'] = '#ffffff';
skin['CONTENT_BG_COLOR'] = '#ffffff';
skin['CONTENT_LINK_COLOR'] = '#0000cc';
skin['CONTENT_TEXT_COLOR'] = '#333333';
skin['CONTENT_SECONDARY_LINK_COLOR'] = '#7777cc';
skin['CONTENT_SECONDARY_TEXT_COLOR'] = '#666666';
skin['CONTENT_HEADLINE_COLOR'] = '#333333';
skin['DEFAULT_COMMENT_TEXT'] = '- add your comment here -';
skin['HEADER_TEXT'] = 'Comments';
skin['POSTS_PER_PAGE'] = '5';
google.friendconnect.container.setParentUrl('/' /* location of rpc_relay.html and canvas.html */);
google.friendconnect.container.renderWallGadget(
{ id: 'div-comment-wall',
site: 'BIG_NUMBER',
'view-params':{"disableMinMax":"true","scope":"SITE","allowAnonymousPost":"true","features":"comment","startMaximized":"true"}
},
skin);
</script>

site: 'BIG_NUMBER',இதில் பிக் நெம்பர் என்பதற்கு பதில் பேஜ் சோர்ஸில் நீங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கும் பெரிய சைட் நெம்பரைப் போட்டுக் கொள்ளவும்.

இதில் பிலாக்கர் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் பின்னூட்ட வேண்டும்.அனானி வேண்டாம் எனில் இந்த ஸ்கிரிப்டில் இந்தப் பகுதியை நீக்கி விடலாம்.
"allowAnonymousPost":"true",


பின்னூட்டப் பெட்டியின் பின்புலம் எழுத்துக்களின் நிறம் போன்றவற்றை நம் விருப்பம் போல மாற்றிக் கொள்ளலாம். மேலும் இதில் மொழி பெயர்ப்பு வசதியும் [translation]உள்ளது.


0 comments:

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and