பிலாக்கர் தந்திருக்கும் ஒரு புதிய வசதி பிலாக்கர்-இன் -டிராப்ட்.பொதுவாக பிலாக்கர் .காம் கணக்கில் உள் நுழைந்து நம் பிலாக்கைப் பார்ப்போம்.இப்போது இன்னும் மேம்படுத்தப் பட்ட வசதிகளுடன் பிலாக்கர்-இன்-டிராப் உள்ளது.
http://blogger.com என்று உரல் கொடுத்து உள் நுழைவதற்கு பதில் http://draft.blogger.com என்ற உரல் மூலம் உள் நுழைய வேண்டியதுதான்.அப்போது திறக்கும் டேஷ்போர்டில் இப்படியிருக்கும்.அங்கு make blogger in draft my default dashboard என்பதை டிக் செய்துவிட்டால் பிலாக்கர் எப்போதும் டிராப்ட் மோடில்தான் திறக்கும்
டிரான்ஸ்லேட் வசதி:
கூகிள் டிரான்ஸ்லேட் வசதி கொடுக்கப் பட்டுள்ளது..எடிட்டர் பாரின் கடைசியில் சிகப்பு நிற பட்டன் இப்படியிருக்கும். Aa
அதை கிளிக்கினால் define/translate என்று இருக்கும்.
பதிவெழுதும் போதே எந்த மொழி வார்த்தைக்கும் மாற்று மொழியில் பொருள் காண்முடியும்.
அல்லது எந்த வார்த்தைக்கும் விளக்கம் காண்முடியும்.
இது இல்லாமல் பிலாக்கரில் நிலைப் பக்கங்கள் static pages உருவாக்க முடியும்.
பிலாக்கரில் நாம் திறக்கும் குறிப்பிட்ட பதிவுப் பக்கம் மட்டுமே அந்த நேரம் பார்க்க முடியும். நிலைப் பக்கம் என்பது எல்லாப் பதிவுப் பக்கங்களைத் திறக்கும் போதும் முகப்பில் காணப்படும். இது ஒரு லிங்க் [உரல்] பகுதிதான். அதைக் கிளிக் செய்தால் நம் உருவாக்கிய பக்கத்திற்குத் திருப்பி விடும்.
நமக்கு பிடித்தது எதையும் புதுப் பக்கங்களில் உருவாக்கவோ/ எடிட் செய்யவோ /நீக்கவோ முடியும்..எடிட் போஸ்ட்[ பக்கத்தில் எடிட் பேஜஸ் னு இருக்கு பாருங்க.
இந்த புதுப் பக்கத்தை நம் லே அவுட் add page element இருந்தும் உண்டாக்கலாம்.
டெமோ விற்கு என் வலைப் பக்கத்தில் முகப்பில் வலைப் பக்கத்தை அழடுபடுத்த பிலாக் பார்லர் என்ற உரலை [link ] கிளிக் செய்தால் பிலாக்கர் பற்றிய என் எல்லாப் பதிவுகளின் லிங்க் கும் ஒரே இடத்தில் இருக்கும்.
இது ஒரு தனிப் பக்கமே தவிர புது இடுகை இல்லை.எனவே இதை தமிழ் மணத்தில் இணைக்கத்தேவையில்லை.ஆனாலும் தமிலிஷ் /தமிழ் 10ஓட்டுப் பட்டைகள் மட்டும் சேர்ந்து விடுகின்றன.
இது போல பத்துப் பக்கங்கள் வரை உருவாக்கிக் கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக