நம் பதிவுகள் புத்தக வடிவில்.....[blog2print]

புதன், பிப்ரவரி 24

பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள் மட்டும்தான் புத்தகமாக அச்சேறனுமா?நம்முடைய மொக்கைகள்,கும்மிகள் ,கவுஜைகள் எல்லாம் புத்தகமாக அதுவும் அந்தந்த பதிவுகளுக்கு வந்த கமெண்ட்டோடு அச்சிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்.
நம் பதிவுகள் புத்தகமாக வந்தால் எப்படியிருக்கும் என்பதை ஒரு டிரைலர் மாதிரி பார்த்துடுவோமா?
அதுக்கு நிறைய தளங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்றுதான் இந்த Blog2print-shared book  தளம்.

அங்கு போய் நம் தளத்தின் உரலக் கொடுத்து விட்டு பிரிண்ட் மை பிலாக் என்பதை கிளிக் செய்ய வேண்டியதுதான்.அடுத்ததாக நம் புத்தகத்தில் எத்தனைப் பதிவுகள் இடம் பெற வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யனும்.எல்லாப் பதிவுகளும்  வேண்டுமா அல்லது இந்த தேதியிலிருந்து இந்த தேதி வரை என இரண்டு செக் பாக்ஸ் இருப்பதில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பழைய அல்லது புதிய பதிவுகள் எது முதலில் இருக்கவேண்டும் என்பது தொடங்கி,நம் புத்தகத்தின் பெயர்,புத்தக வடிவமைப்பு ,முன் மற்றும் பின் அட்டைப் படங்கள் ,கமெண்ட்கள் என தெரிவு செய்ய நிறைய இருக்கிறது.தேர்ந்தெடுத்த பின்பு கிரியேட் என்று கிளிக் செய்து விட்டால் சில நிமிடங்களில் புத்தகம் தயாராகி விடுகிறது.


 

  
இங்கு இருப்பது என் வலைப் பக்கத்தின் மாதிரி.முகப்பு,பின் அட்டைகளுக்கு நாம் படத்திற்கான லிங்க் தராவிட்டால் நம் பதிவில் உள்ள படங்களே  முகப்பாக வந்து விடுகிறது

 


 
ஜூம் செய்து பார்க்கவும்,அடுத்த பக்கம் போகவும் என பட்டன் கள் இருக்கிறது.என்ன பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தால் முழுமையாக வரும் போலும்.தமிழ் எழுத்துக்கள் கொஞ்சம் உடைந்து வருகிறது.

 
இதற்குப் பிறகுதான் மேட்டரே.ஆமாம் மேற்கொண்டு புத்தகம் நமக்கே நமக்கு கிடைக்கனும்னா மேட்டர் கொடுக்கனும்.டவுன் லோடு செய்ய எவ்வளவு டாலர் பணம்னு போட்டிருக்கு.ஆர்டர் செய்து add to cart  போட்டுட்டா புத்தகம் கையில்.அல்லது  pdf கோப்பாக தரவிறக்க என்றாலும் செய்யலாம். இல்லை சேவ் செய்து பின்னாடி முடிவு பண்ணிக்கலாம் என்றாலும் பதிவு செய்துக்கனும். பதிவு செய்த உறுப்பினர்கள்  என்றால் புத்தகத்தில் நாம் விரும்பியபடி எடிட் செய்துக்கலாம்.
 

ஆசைக்கு உள்ளே நுழைந்து என் பதிவுகளைப் புத்தகமாகப் பார்த்துட்டேன்.நீங்களும் ஒருமுறைப் போய் பாருங்களேன்.





13 கருத்துகள்:

  1. Thamiz Priyan சொன்னது…:

    என்னது பணம் த்ரணுமா? அஸ்க்கு...புஸ்க்கு.;-))

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    ஆசை தோசை...எல்லாம் இலவசமா கிடைக்கனும்னா தமிழ்நாட்டுல தேர்தல் வந்தாத்தான்...:))

    சும்மா உங்க வலைப் பக்கத்தை புத்தகமாக்கிப் பார்த்துட்டு விட்டுடுங்க.அதுக்கு நோ பணம்.

  1. சென்ஷி சொன்னது…:

    :)

    ஆஹா.. இப்போ எல்லோருமே புக் போட ஆரம்பிச்சிடுவாங்களா டீச்சர்

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    போட்றதோட மட்டுமில்லை வித்து குடுக்கவும் சொல்லுவோம்ல:))

  1. மாதேவி சொன்னது…:

    ஆஹா சூப்பர்.

  1. க.பாலாசி சொன்னது…:

    ஆசைக்கு நாமளும் ஒரு புக்கு போட்டுத்தான் பாப்போமே... என்ன நாஞ்சொல்லுறது...

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    நன்றி மாதேவி

    நன்றி பாலாஜி.காசு கேக்காத ஸ்டெப் வரைக்கும் போடுங்க.அப்பால வுடுங்க ஜூட்

  1. கண்மணி டீச்சர்... நாம போடற புக்கு தமிழ்மணம் முகப்பில் பதிவர் நூல்கள் பகுதியில் வருமா? அப்படி இல்லையென்றால்.. சீச்சீ.. இந்தப்பழம் புளிக்கும்.:-))))))))

  1. கண்ணா.. சொன்னது…:

    அய்...நல்லா இருக்கே.............

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    அமைதியக்கா;) பழத்தை சாப்பிட்டுப் பாத்துதானே புளிப்பானு சொல்லனும்.டிரை பண்ணிப் பாருங்க

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    நன்றி கண்ணா நம்ம எழுத்த புக்குல பாக்கும்போது நல்லாத்தான் இருக்கும்.

  1. Kandumany Veluppillai Rudra சொன்னது…:

    கட்டுபடியாகல்லே? ஆதலால்,வலை வீசல்லே

  1. மாய உலகம் சொன்னது…:

    புத்தகம் நமக்கே நமக்கு கிடைக்கனும்னா மேட்டர் கொடுக்கனும்.டவுன் லோடு செய்ய எவ்வளவு டாலர் பணம்னு போட்டிருக்கு.


    ஸ்டார்டிங் நல்லாதானே போயிட்டுருந்துச்சு...ஆனா ஃபினிசிங் சரியில்லையே.........
    rajeshnedveera
    http://maayaulagam-4u.blogspot.com