பிலாக்கர் வலைப் பக்கத்தைத் திறக்கும் போது உரல் பட்டைப் பகுதியில் பிலாக்கருக்கான சிறு படம்தோன்றும்

யாகூ திறக்கும் போது உரல் பாரில் இப்படியும் தோன்றும்
இவை அந்தந்த தளத்திற்கான படவுரு [icon]ஆகும். வலைப்பக்கம் பிலாக்கர் கணக்கிலிருந்தால் B எனவும் வேர்ட்பிரஸ் தளமென்றால் W எனவும் உரல் பட்டையில் தோன்றும்.அதை மாற்றி ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையுடையதாக நம் விருப்பதிற்கு சிறு படவுருக்கள் [ஐகான்] உரல் பட்டையில் கொண்டு வரலாம்.இது ஃபேவரைட் ஐகான்[favicon] எனப்படும்.
இது நம் விருப்பப்படி நம் பெயரைக் குறிக்கும் எழுத்துக்கள் அல்லது சிறு அசையும் படம் அல்லது அசையாப்படம் என எதுவாகவும் இருக்கலாம்.இதற்கு ஃபெவிகான் [favicon] உருவாக்கும் மென் பொருளைத் தரவிறக்கியோ அல்லது இலவச தளங்களில் சென்றோ உருவாக்கிக் கொள்ள முடியும்.இதை நம் வலைப்பக்கத்தின் லே அவுட் பகுதியில் edit html கிளிக் செய்து கீழே உள்ளபடி ஏதேனும் ஒரு வகையில் சேர்த்து விட்டால் போதும்.
நம் வலைப்பக்கம் திறந்தவுடன் படவுருவுடன் நம் வலைப் பக்கம் திறக்கும்.இங்கு YOUR IMAGE URL என்பதை மட்டும் நீக்கிவிட்டு நம்முடைய படவுரு வை எந்த தளத்தில் சேமித்திருக்கிறோமோ [போடோபக்கெட்,பிக்காஸா]அந்த உரலை இட வேண்டும்.என் கண்மணி பக்கத்தில் பாருங்கள் கண் மூடித் திறக்கும்.
அரும்புகள் வலைப் பக்கத்தில் பூ விரிந்து மலரும்.
ஃபெவிகான் உருவாக்கும் மென்பொருள் பயன்படுத்தும் போது அந்த படவுரு.ico நீட்டிப்பு கோப்பாக இருக்கும்.இதைவிட இன்னும் எளிதான .jpg .png .gif வகையான கோப்புகளாக பயன்படுத்தலாம்.இதனால் புதிய .ico படவுரு உருவாக்குவதற்கு பதில் நம்முடைய எந்த வகை படக் கோப்பையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.போட்டோ பக்கெட் பிலாக்கர் புகைப்பட சேமிப்பிற்கு எளிதானது.
நாம் பயன் படுத்தும் கோப்பு வகைக்கு ஏற்றவாறு நிரலியில்'image/gif'/> என்பதில் gif க்கு பதில் 'image/jpg'/>அல்லது 'image/png'/> என மாற்றியமைத்தால் போதும் அவ்வளவே.

மிகவும் அருமை.. எனது தளத்திலும் இப்போது favicon ஜொலிக்கிறது.
www.tn-tourguide.blogspot.com