பி
லாக்கர் தனது பத்தாண்டு நிறைவையொட்டி பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளித்திருக்கிறது.அதிலொன்றுதான் பின்னூட்டங்களில் பின்னூட்டமிடுபவரின் புரோபைல் படம் [அவதார்] தெரிவது.
பெரும்பாலான பிலாக்கர் பிலாக்குகளில் அந்த வசதி தானாகவே மேம்படுத்தப்பட்டு புரோபைல் உருவம் [அவதார்]தெரியத் தொடங்கி பிட்டது.பல வலைப்பக்கங்களில் நாமாகவே அதை மேம்படுத்த வேண்டியிருக்கும்.பின்னூட்டமிட்டவரின் புகைப் படத்தோடு அதைப் பார்ப்பது சுவாரஸ்யமானதுதானே?கொஞ்சம் பொறுமையும் ஆர்வமும் இருந்தால் செய்து கொள்ளலாம்.
உங்க பிலாக்கின் Settings பகுதிக்குச் சென்று Comments கிளிக் செய்து அங்கு Show profile images on comments? என்பது டிக் செய்யப்பட்டிருக்கிறதா என சோதிக்கவும்.
இல்லையென்றால் பின்வரும் மாற்றங்களைச் செய்யவும்.
இதைச் செய்து பார்க்க விரும்பும் முன்பாக முதலில் உங்க பிலாக்கின் மொத்த டெம்ப்லேட்டையும் சேவ் செய்து வைத்துக் கொண்டு ஆரம்பிக்கவும். பொதுவாக எந்த ஒரு டெம்ப்லேட்டில் HTML மாற்றம் செய்வதாக இருந்தாலும் இதைக் கடைபிடிப்பது அவசியம்.
உங்கள் வலைப்பூவின் [பிலாக்] Dashboard ன் Layout பகுதிக்குச் சென்று Edit HTML என்று கிளிக் செய்து பின் Expand Widget Templates என்பதையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின்பு Ctrl+F என்பதை அழுத்தி வரும் find கட்டத்தில்
<dl id='comments-block'>
என்பதை டைப் செய்து அந்த நிரலித் துண்டைக் கண்டுபிடிக்கவும்.அதற்கு பதிலாக [அதை நீக்கி விட்டு]கீழ்வரும் நிரலியைச் சேர்க்கவும்
<dl expr:class='data:post.avatarIndentClass' id='comments-block'>
மீண்டும் கீழ் வரும் கோட் [நிரலி] எங்கிருக்கிறது எனக் கண்டறிந்து
<a expr:name='data:comment.anchorName'/>
அதை நீக்காமல் இந்தப் பகுதியையும் அதன் கீழ் சேர்த்து சேவ் செய்து விடவும்.
<div class="code">
<b:if cond='data:blog.enabledCommentProfileImages'>
<data:comment.authorAvatarImage/>
</b:if>
</div>
அவ்வளவுதாங்க.வேலை முடிந்தது. இதற்குப் பிறகு தேவையானால் அனானிப் பின்னூட்டத்திற்கும் மாற்றம் செய்யலாம். அனானியாக பின்னூட்டமிடுபவருக்கு புரோபைல் படம் எதுவும் இருக்காது என்பதால் நாமே விரும்பிய படம் வரும்படிச் செய்யலாம்.டெம்ப்லேட்டில் HTML பகுதியில் </div>
]]></b:skin> :
க்கு மேலாக பின்வரும் CSS பகுதியை இணைத்து விடவும் .
<div class="code">
/* Avatar */
.avatar-image-container img {
background:url(YOUR IMAGE URL);
width:35px;
height:35px;
}
</div>
இதில் YOUR IMAGE URL என்பதற்கு பதில் உங்களுக்கு விருப்பமானபடத்தின் [அனானிக்கான அவதார்]உரலை செர்த்துக் கொள்ளலாம்.மாதிரிக்கு இப்படி </div>
/* Avatar */ .avatar-image-container img { background:url(http://i860.photobucket.com/albums/ab162/LeBloggerTemplate/AvatarBlogger.png); width:35px; height:35px; }
இவ்வளவுதாங்க இப்ப உங்க பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் பின்னூட்டமிட்டவரின் முகம் [புரோபைல்] காட்டிச் சிரிக்கும்!!!!
டிஸ்கி:
வல்லியம்மாவுக்காகவும் ஓல்டு பிலாக்கர் டெம்லேட்டில் சேர்ப்பதற்காகவும் இந்த சின்ன நிரலி.
<dl id='comments-block'> என்பதை நீக்கி விட்டு பின் வரும் கோடை[code]சேர்க்கவும்
***************************
<dl expr:class='data:post.avatarIndentClass' id='comments-block'>
<b:loop values='data:post.comments' var='comment'>
<div class='comments-singleblock'>
<dt class='comment-author' expr:id='"comment-" + data:comment.id'><b:if cond='data:comment.favicon'>
<img expr:src='data:comment.favicon' height='16px' style='margin-bottom:-2px;' width='16px'/>
</b:if>
<a expr:name='"comment-" + data:comment.id'/>
<b:if cond='data:blog.enabledCommentProfileImages'>
<data:comment.authorAvatarImage/>
</b:if>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக