html-----என்கோடிங்/டீ கோடிங் செய்தல்

புதன், மார்ச் 10

நீங்கள் பிலாக்கர் அல்லது இணையம் சம்பந்தப் பட்ட டெக்னிகல் பதிவு போடுபவர்களாக இருந்தால் சில நேரம்  html-கோடிங்குகளை பதிவில் கொடுக்க வேண்டியிருக்கும்.
பிலாக்கர் எடிட்டர் நேரடியாக    html- கோடிங்கை ஏற்றுக் கொள்ளாது என்பதால் அதை என் கோடிங் செய்து எழுத வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் பதிவில் நாம் தரும் கோடிங் தெரியாது.
உதாரணமாக <div> என்பதை அப்படியே எழுதினால் தெரியாது.அதை &lt;div&gt;என்று மாற்றி எழுதினால் மட்டுமே பதிவில் தெரியும்.

html ஐ கோடிங் டீ-கோடிங் செய்ய இந்த தளம் வசதியாக இருக்கிறது.

ஃபயர் பாக்ஸ் பயன்படுத்துபவர்களாக இருந்தால் கிரீஸ் மங்கி நிறுவி இதற்கான ஜாவா ஸ்கிரிப்டை தரவிறக்கிக் கொண்டால் எடிட்டரிலேயே அந்த என் கோடிங் வசதி சேர்ந்து கிடைக்கும்.ஒவ்வொரு முறையும் வேறு தளத்தில் காபி பேஸ்ட் செய்து மாற்ற வேண்டியிருக்காது. இப்படி  படத்தில் இருப்பது போல


ஆனால் இது ஓல்ட் போஸ்ட் எடிட்டரில் மட்டுமே செயல்படுகிறது.அதனால் செட்டிங்ஸில் ஓல்டு எடிட்டரை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்களும் எடிட்டரை மாற்ற விரும்பாதவர்களும் நான் சொன்ன தளதையேப் பயன் படுத்தலாம்.

5 கருத்துகள்:

  1. சுடுதண்ணி சொன்னது…:

    ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தேன். மிக்க நன்றி கண்மணி :)...

    மகளிர் தின வாழ்த்துக்கள்!!

  1. சசிகுமார் சொன்னது…:

    நல்ல பயனுள்ள பதிவு நண்பரே , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    சுடு தண்ணி நன்றி
    நீங்கள் தீ நரி என்றால் எடிட்டரிலேயே கொண்டு வரலாம்.

    நன்றி சசிகுமார்.

  1. சுடுதண்ணி சொன்னது…:

    //நீங்கள் தீ நரி என்றால் எடிட்டரிலேயே கொண்டு வரலாம்.//
    ரொம்ப நல்லது. :D. தகவலுக்கு நன்றி நன்றி நன்றி :)

  1. CP சொன்னது…:

    தகவலுக்கு நன்றி தோழி!

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and