நம் பதிவுகளில் எப்படி நம் கையெழுத்துப் போடுவது எப்படி என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.அதற்கு நம் கையெழுத்து வடிவத்தின் html கோடிங் தேவை. தனிப் பதிவுக்கு இங்கும் போய்ப் பார்க்கலாம்
இந்த தளம் சென்று நம்முடைய கையெழுத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.இந்த தளத்தில் அந்தக் கையெழுத்துக்கான html நிரலியைப் பெறமுடியும் என்பதால் இது எளிதாக இருக்கும்.
இது தமிழ் எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் ஆட்டோமேட்டிக் கிரியேட்டர் இல்லாமல் வேறொரு ஆப்ஷனும் அந்த தளத்தில் உள்ளது.பெயிண்ட்டில் வரைவது போல சுட்டியின் [மௌஸ்]உதவியால் நம் கையெழுத்தை ஆங்கிலம் தமிழ் அல்லாமல் எந்த மொழியிலும் நாமே எழுதிக் கொள்ள முடியும். இதே ஆப்ஷன் நம்முடைய கணிணியின் மூலமும் செய்யக் கூடும்.நாமே எழுதிப் பெறுவதை போட்டோ பக்கெட் தளத்தில் ஏற்றி அந்தக் கையெழுத்துக்கான html நிரலியைப் பெறமுடியும்.
தனிப் பதில் பதிவர் கையெழுத்து:
மேற்கூறிய ஏதாவது முறையில் html கோடிங் உருவாக்கிய பிறகு நம் வலைப் பக்கத்தின் settings பதியில் formatting டேப் கிளிக் செய்து கீழாக உள்ள post template என்ற பெட்டியில் இந்த கோடிங்கை சேவ் செய்திட்டால் போதும்.
html ல் அனுபவம் உள்ளவர்கள் பிலாக்கின் edit html பகுதியில் கீழே உள்ள ஏதேனும் ஒரு வரியைக் கண்டுபிடுத்து அதற்கு கீழாகவும் நம் கையெழுத்தின் கோடிங்கை சேர்த்து விடலாம்.
<data: post.body/>
or
<div class='post-footer-line post-footer-line-1'>
<img src='url_of_your_signature_image' style='border:0px;'/>
இதில் தடித்த எழுத்தில் இருப்பது நம் கையெழுத்திற்கான லிங்க்
கூட்டுப் பதிவில் பதிவர்களின் தனித்தனி கையெழுத்திட:
குழுப் பதிவில் ஒவ்வொருவரும் அவரவர் எழுதும் பதிவுகளின் கீழ் மட்டும் அவரவர் பெயர் தெரிய வேண்டும் என்றால் முன்பு சொன்ன post template பாக்ஸில் சேர்ப்பது சரிவராது.
[எல்லாப் பதிவுகளிலும் எல்லோருடைய கையெழுத்துகளும் தெரியும்].
எனவே பிலாக்கின் edit html பகுதியில் கீழே உள்ள ஏதேனும் ஒரு வரியைக் கண்டுபிடுத்து
<data:post.body/>
or
<div class='post-footer-line post-footer-line-1'>
அதற்கு கீழாக பின் வரும் கோடிங்கைச் சேர்க்கவும்.
<b:if cond='data:post.author == "Author1Name"'>
<img src='url_of_author1_signature_image' style='border:0px;'/>
</b:if>
<b:if cond='data:post.author == "Author2Name"'>
<img src='url_of_author2_signature_image' style='border:0px;'/>
</b:if>
இதிலும் கலர் எழுத்துக்களில் உள்ளவற்றை மாற்ற வேண்டும்.இங்கு இரண்டு பதிவர்களுக்கான நிரலி மட்டுமே உள்ளது 5 அல்லது 10 பதிவர்கள் குழுவில் இருந்தாலும் இதை நீட்டிக் கொள்ளலாம்.
author1name க்கு பதில் முதல் பதிவர் பெயரும் url_of_author1_signature_imageக்கு பதில் முதல் பதிவருக்கு உருவாக்கிய கையெழுத்தின் லிங்க்கும் சேர்க்கனும்.இப்படியே எல்லாப் பதிவர்களுக்கும் செய்ய வேண்டும்.டெமோவிற்கு இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்.
டிஸ்கி: post body என்பது என் கோடிங் செய்யும் போது சிரிப்பான் போலத் தெரியும்.அது p எனக் கொள்க.
very informative post.keep up the gud work