ஆல்-இ ன் -ஒன் - விபியா டூல் பார் (wibiya toolbar)

Friday, February 26

ல வலைப் பக்கங்களில் அந்தப் பக்கத்தின் கீழே குறுக்கு வாட்டில் ஒரு டூல் பார் பர்த்திருப்பீங்க.இப்போது கொஞ்ச நாளா தமிழ்மணத்திலும் முகப்புப் பக்கத்தில் சிவப்பு நிறத்தில் தெரிகிறது.இது ஒரு ஆல் -இன் -ஆல் அழகு ராஜா மாதிரி...சாரிஆல் - இன் -ஒன்  டூல் பாருங்க.

நமக்கு வேண்டிய கேட்ஜட்டுகளைஇதில் சேர்த்துக்கலாம்.தமிழ்மணத்தில் உள்ளதையும் என் வலப் பக்கங்களில் உள்ளதையும் பாருங்க தெரியும்.
உங்களுக்கும் இது போல வேணும்னா இங்கே போய்ப் பாருங்க.
நீங்க செய்ய வேண்டியதெல்லாம் அந்த சைட்டில் போய் முதலில் பதிவு செய்துக்கனும்.நம் யூசர் ஐடி ஈ மெயில் கொடுக்கனும்.நம் ஈ மெயிலுக்கு ஒரு கன்பர்மேஷன் மெயில் வரும்.

முன்பெல்லாம் கன்பர்மேஷன் அஞ்சல் வரவே ஒரு வாரம் கூட ஆகும்.இப்போது உடனேயே வந்து விடுகிறது.
அதில் உள்ள லிங்கை கிளிக்கி  நாம் பதிவு செய்து கொண்டதை ஆக்டிவேட் செய்துக்கனும்..இப்போ கீழே உள்ள படத்தில் இருப்பது போல  'get new code' பட்டனை அழுத்தவும்.

 நமக்கு என்ன நிறத்தில் டூல் பார் வேண்டுமென்பதை தெரிவு செய்து கொள்ளலாம்




அடுத்து  நம்முடைய வலைப் பக்கம் எந்த தளத்தில் என்பதை செலக்ட் செய்யனும்.

இப்போது நம் வலைப் பக்கத்துக்கு அந்த விட்ஜெட் பேஜ் எலிமெண்ட் ஆக வரும்.அதை ஆட் செய்தால்  சேர்க்கப் பட்டுவிடும்.
விபியா  தளத்தில் டேஷ் போர்டில் உள்ள எடிட் டூல் பார் மூலம் என்னென்ன நம் டூல் பாரில் சேர்க்க வேண்டுமோ அதை add application  மூலம் சேர்த்துக் கொள்ளலாம்.



இந்த டூல் பார் வலைப் பக்கத்தின் கீழாக குறுக்காக இருக்கும்.இது பதிவுகளைப் பார்க்க இடைஞ்சலாகத் தோணினால்  ஓரத்தில் இருக்கும் கீழ் நோக்கிய இரட்டை  அம்புக்குறிகளை கிளிக்கி இதைச் சுருக்கியும் வைக்கலாம். நமக்கு மட்டுமே சுருக்கப் பட்டு ஓரத்தில் இருக்கும்.அதே பக்கம் படிக்கும் மற்றவர்களுக்கு நார்மலாக இருக்கும்.
தமிழ்மண முகப்பில் உள்ளதையும் வேண்டும் போது சுருக்கி வைக்கலாம்.

4 comments:

  1. Anonymous said...:

    Thanks a lot

  1. Thamiz Priyan said...:

    டீச்சர், நானும் சேர்த்துட்டேன். நன்றி!

  1. ஓகோ... அப்டியா... நெறய டெக்னிக்கலா சொல்றீங்க... நன்றிங்க...

  1. நன்றி அனானி

    தமிழ்ப் பிரியன் இந்த பதிவுக்கு முன்னமே சேர்த்துட்டீங்கன்னு தெரியும் :)

    நன்றி பாலாசி..எதோ எனக்குத் தெரிந்தது உங்களோடெல்லாம் பகிர்ந்துக்கிறேன்.அவ்வளவே

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and