பிலாக்கர் html கோடிங் மாற்றி... (html code converter)

Thursday, May 27

முந்தைய ஒரு பதிவில் html code ஐ நம் பதிவுகளில் எப்படி எழுதுவது எனச் சொல்லியிருந்தேன்.அதற்கு வேறு ஒரு சைட்டுக்குச் செல்லவோ அல்லது பயர்பாக்ஸ் ஆட் ஆன் சேர்க்கவோ வேண்டியிருந்தது.எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்களுக்கு ஆட் ஆன் வசதி இல்லை.
அந்தச் சிரமம் இல்லாமல் சுலபமாக html code ஐ கன்வர்ட் செய்ய கூகுள் ஒரு கேட்ஜெட் வழங்குகிறது.அதை அப்படியே நம் பிலாக்கில் சைட் பாரில் ஆட் ஜாவா ஸ்கிடிப்ட் கேட்ஜெட் மூலம் சேர்த்து விட்டால் போதும்
உங்க சைடு பாரில் கன்வர்ட்டர் வந்து விடும் இப்படி.
இதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய கோடிங் கீழே.

<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/113323126709859965385/blogger.xml&amp;up_grows=10&amp;up_conv1=1&amp;up_conv2=1&amp;up_conv3=1&amp;up_conv4=1&amp;up_conv5=1&amp;synd=open&amp;w=320&amp;h=200&amp;title=Blogger+Html+Code+Converter&amp;border=%23ffffff%7C0px%2C1px+solid+%23993333%7C0px%2C1px+solid+%23bb5555%7C0px%2C1px+solid+%23DD7777%7C0px%2C2px+solid+%23EE8888&amp;output=js"></script>



இதை அப்படியே காபி செய்து சைட் பாரில் ஆட் ஹெச்டிஎமெல் ஓப்பன் செய்து பேஸ்ட் செய்து விடவும்

நம் வலைப் பக்கத்திற்கான லிங்க்/இணைப்புகளை அறிய ..(Backlinks )

Tuesday, May 25

ம் பதிவுகள் சுவாரஸ்யமா இருக்கோ இல்லையோ ஆனா எத்தனை பேர் படிச்சிருக்காங்க பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எல்லோருக்கும் ஆர்வமுண்டு.
மேலும் நம் வலைப் பதிவுக்கு யார் யார் லிங்க்/இணைப்பு கொடுத்துருக்காங்கன்னு தெரிஞ்சிக்கவும் பிடிக்கும்.
பின்னூட்டத்தின் மூலமோ அல்லது தொடர்பதிவுக்கு அழைப்பதின் மூலமோ அல்லது நம் வலைப்பக்கத்தை விமர்சித்தோ யாரும் தங்கள் இடுகையில் நம் பக்கத்திற்கான உரல் கொடுத்திருந்தால் அதுதான் பேக் லிங்க் எனப்படும் இணைப்பு.இதை செட்டிங்க்ஸில் எனேபில் செய்திருந்தால் நம் வலைப் பக்கத்தின் அடியில் குறிப்பிட்ட இடுகைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் இணைப்பு இடுகைக்குக் கீழேயே தெரியும்.இதில் திரட்டிகளும் அடங்கும். தமிழ்மணம் ,தமிழிஷ் , உலவு போன்ற திரட்டிகள் தரும் லிங்க் நீங்கலாக மற்றும் யார் யார் நம் பக்கத்தையோ அல்லது குறிப்பிட்ட இடுகைகளையோ இணைப்புக் கொடுத்து முன்னிறுத்தி இருக்காங்கன்னு மொத்தமாக தெரிந்து கொள்ளலாம்.
நம் வலைப் பக்கத்தின் அலெக்ஸா,கூகுள்,யாஹூ பேஜ் ரேங்க் போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
கீழே உள்ள உரல்களைப் பயன் படுத்திப் பாருங்க.

Backlinks கண்டறிய சில உரல்கள்:
உங்கள் வலைப் பக்கத்தின் உரலை மட்டும் கொடுத்தால் போதும்.

1.http://blogsearch.google.com/

2.http://www.google.com/search?q=link%3A


3.http://www.backlinkwatch.com



4.http://checkbacklink.com/

5.http://popuri.us/



பிலாக்கரில் எலும்புத்துண்டு ஐகான் நீக்க

Thursday, May 20

டிக்கடி டெம்ப்லேட்டில் மாற்றம் செய்து புதுப் புது கேட்ஜெட்ஸ் சேர்க்கும் போதும் எடிட் ஐகான் எலும்புத் துண்டு போலத் தெரியும். நாம் பிலாக்கரில் லாகின் செய்து   உள்ளே நுழையும் போது நம் வலைப் பக்கத்தில் இப்படி  எலும்புத் துண்டு  போல் படம்  தெரியும்.நாம் சேர்த்த கேட்ஜெட்டை  வலையின் முகப்பில் இருந்தபடியே எடிட் செய்ய  இந்த ஐகான் உதவும்.
மற்றவர்களுக்குத் தெரியாது என்றாலும் நம் பக்கத்தில் இப்படித் தெரிவது வலைப் பக்கத்தின் அழகைக் கெடுப்பது போல இருக்கும்.இதை எளிதில் நீக்கலாம்.

Edit htmil சென்று Expand Widget Templates டிக் செய்து விட்டு ctrl+f  அழுத்திக் கிடைக்கும் find கட்டத்தில் <b:include name='quickedit'/> என்று டைப் செய்தால் .நாம் சேர்த்த அத்தனை கேட்ஜெட்டுகளின் எலும்புத்துண்டு எடிட் ஐகானும் படத்தில் உள்ளது போல ஹைட் லைட் செய்யப் பட்டுத் தெரியும்.பின்பு அவற்றை டெலிட் செய்திட வேண்டும்.
.

ஜி மெயிலிருந்து பிலாக்கிங் ...( blogging from Gmail)

Saturday, May 15

பிலாக்கர் சைட் ஓப்பன் செய்து பிலாக்கர் போஸ்ட் எழுதுவோம்.மைக்ரோசாப்ட் வேர்டிலிருந்தும் போஸ்ட் செய்யலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.இப்போது இன்னும் எளிதாக ஒரு வழி
ஜி மெயிலிலிருந்தும் நேரடியாக பிலாக் போஸ்ட் எழுதி டிராப்ட் ஆக சேவ் செய்யவோ அல்லது பதிவிடவோ முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பிலாக் [ஒரே ஜிமெயில் ஐடி மூலம்] இருந்தாலும் வேண்டியதை செலக்ட் செய்து பதிவிடலாம்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது முதலில் ஜிமெயில் ஓபன் செய்து அதில் 'லேப்ஸ்' எனப்படும் குடுவை ஐகானை கிளிக் செய்து 'add gadgets' என்பதை enable செய்து கொள்ள வேண்டும்.


இப்போது செட்டிங்ஸ் டேப் ஓப்பன் செய்து பார்த்தால் gadgets என்பது டூல் பாரில் சேர்க்கப் பட்டிருக்கும்.படம் பார்க்க:



அடுத்து gadgets என்பதைக் கிளிக் செய்து கீழே உள்ள வரியை சேர்த்து ஆட் செய்தால்

http://www.blogger.com/gadgets/post.xml

நம்முடைய மெயிலின் வலது பக்க சைட் பாரில் சாட் விண்டோ போலவே பிலாக்கருக்கான விண்டோ புதிதாக சேர்ந்து விடும்.இதைத் தேவைப்படும் போது நீட்டவோ சுருக்கிக் கொள்ளவோ செய்யலாம்.

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and