ஜி மெயிலிருந்து பிலாக்கிங் ...( blogging from Gmail)

Saturday, May 15

பிலாக்கர் சைட் ஓப்பன் செய்து பிலாக்கர் போஸ்ட் எழுதுவோம்.மைக்ரோசாப்ட் வேர்டிலிருந்தும் போஸ்ட் செய்யலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.இப்போது இன்னும் எளிதாக ஒரு வழி
ஜி மெயிலிலிருந்தும் நேரடியாக பிலாக் போஸ்ட் எழுதி டிராப்ட் ஆக சேவ் செய்யவோ அல்லது பதிவிடவோ முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பிலாக் [ஒரே ஜிமெயில் ஐடி மூலம்] இருந்தாலும் வேண்டியதை செலக்ட் செய்து பதிவிடலாம்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது முதலில் ஜிமெயில் ஓபன் செய்து அதில் 'லேப்ஸ்' எனப்படும் குடுவை ஐகானை கிளிக் செய்து 'add gadgets' என்பதை enable செய்து கொள்ள வேண்டும்.


இப்போது செட்டிங்ஸ் டேப் ஓப்பன் செய்து பார்த்தால் gadgets என்பது டூல் பாரில் சேர்க்கப் பட்டிருக்கும்.படம் பார்க்க:அடுத்து gadgets என்பதைக் கிளிக் செய்து கீழே உள்ள வரியை சேர்த்து ஆட் செய்தால்

http://www.blogger.com/gadgets/post.xml

நம்முடைய மெயிலின் வலது பக்க சைட் பாரில் சாட் விண்டோ போலவே பிலாக்கருக்கான விண்டோ புதிதாக சேர்ந்து விடும்.இதைத் தேவைப்படும் போது நீட்டவோ சுருக்கிக் கொள்ளவோ செய்யலாம்.

4 comments:

 1. ஹூகும்! என்னுடைய‌ ஜீமெயிலில் வ‌ர‌வில்லை.

 1. வரும்....ஆனா..வராது?????:))

  முதலில் கேட்ஜெட் சேருங்க.அதுக்கு முன்னே ஜிமெயில் அப்டேட் பண்ணுங்க.க்ளாசிக் வெர்ஷனில் வராதோ

 1. Anonymous said...:

  i got it
  thanks

 1. mkr said...:

  சேர்ந்தாச்சு கண்மணியக்கா..... எல்லாம் பயனுள்ள தகவல்.உங்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and