நம் பதிவுகள் சுவாரஸ்யமா இருக்கோ இல்லையோ ஆனா எத்தனை பேர் படிச்சிருக்காங்க பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எல்லோருக்கும் ஆர்வமுண்டு.
மேலும் நம் வலைப் பதிவுக்கு யார் யார் லிங்க்/இணைப்பு கொடுத்துருக்காங்கன்னு தெரிஞ்சிக்கவும் பிடிக்கும்.
பின்னூட்டத்தின் மூலமோ அல்லது தொடர்பதிவுக்கு அழைப்பதின் மூலமோ அல்லது நம் வலைப்பக்கத்தை விமர்சித்தோ யாரும் தங்கள் இடுகையில் நம் பக்கத்திற்கான உரல் கொடுத்திருந்தால் அதுதான் பேக் லிங்க் எனப்படும் இணைப்பு.இதை செட்டிங்க்ஸில் எனேபில் செய்திருந்தால் நம் வலைப் பக்கத்தின் அடியில் குறிப்பிட்ட இடுகைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் இணைப்பு இடுகைக்குக் கீழேயே தெரியும்.இதில் திரட்டிகளும் அடங்கும். தமிழ்மணம் ,தமிழிஷ் , உலவு போன்ற திரட்டிகள் தரும் லிங்க் நீங்கலாக மற்றும் யார் யார் நம் பக்கத்தையோ அல்லது குறிப்பிட்ட இடுகைகளையோ இணைப்புக் கொடுத்து முன்னிறுத்தி இருக்காங்கன்னு மொத்தமாக தெரிந்து கொள்ளலாம்.
நம் வலைப் பக்கத்தின் அலெக்ஸா,கூகுள்,யாஹூ பேஜ் ரேங்க் போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
கீழே உள்ள உரல்களைப் பயன் படுத்திப் பாருங்க.
Backlinks கண்டறிய சில உரல்கள்:
உங்கள் வலைப் பக்கத்தின் உரலை மட்டும் கொடுத்தால் போதும்.
1.http://blogsearch.google.com/
2.http://www.google.com/search?q=link%3A
3.http://www.backlinkwatch.com
4.http://checkbacklink.com/
5.http://popuri.us/
இப்படியெல்லாம் ஒரு விஷயம் இருக்கு என்பதே இப்போதான் தெரிந்தது.