பிலாக்கர் இம்போர்ட் எளிதாகி விட்டது. [how to import larger blog]

செவ்வாய், பிப்ரவரி 9

ன்னுடைய முந்தைய பதிவில்பி.ஏ.இ பிலாக் இம்ப்போர்ட் செய்யும் போது பிழைச்செய்தி வந்து என்ன செய்வதுன்னு புரியாம கமெண்ட் இல்லாத பிலாக் மட்டும் ரெடி பண்ணியதை எழுதியிருந்தேன்.
நண்பர் நட்புடன் ஜமால் பின்னூட்டத்தில் நண்பர் நசரேயனுடைய இரண்டு தினங்களுக்கு முன்பு இட்ட இடுகையின் லிங்கைக் கொடுத்திருந்தார்.இப்படித்தான் பல நல்ல பதிவுகள் கண்ணுல படாமயே போயிடுது:((.


பிலாக்கர் இம்போர்ட் எளிதாகி விட்டது. [நசரேயனுக்கு நன்றி]
மிக அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இருந்தால் இம்போர்ட் செய்ய பிலாக் ஸ்பிலிட்டர்[blog splitter]உபயோகிக்கும் முறையும் அதைத் தரவிறக்கம் செய்ய உரலும் கொடுத்திருந்தார்.how to import largr blog
அதைப் பார்த்த பின் தான் கணிணி கை நாட்டாக எப்படி பின்னூட்டங்களை டெலிட் செய்து முயற்சித்தோம்னு தோன்றியது. அதைச் செயல்படுத்தி இப்போது உள்ள பிலாக் போலவே எல்லாப் பதிவுகள்+பின்னூட்டங்கள்+ ஆட் ஆன்ஸ்+விட்ஜெட்டுகளோடு ஒன்னொரு புது பிலாகில்  இம்போர்ட் செய்ய முடிந்தது .வேறு ஒரு மின்னஞ்சல் மற்றும் வலைப் பக்க முகவரியில் [blog url:http://kanmani-test.blogspot.com]  வந்து விட்டது.என்ன ஒன்று இந்த புது வலைப்பக்க உரலை மீண்டும் புதிதாக திரட்டியில் இணைக்க வேண்டியிருக்கும்.நம்ம பிலாக்கை முடக்கும் அளவுக்கு பெர்ர்ரீய எழுத்தாளரோ நல்ல பதிவுகளோ இல்லாமல் இருக்கலாம்.இப்படி ஒரு வழி தெரிந்த பிறகு முன்னெச்சரிக்கையாக இருப்பது தப்பில்லை.
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இம்பொர்ட் எக்ஸ்போர்ட் செய்ய முடிந்தால் நம் பிலாக்கிலேயே செய்து விடலாம்.
பிழைச் செய்தி வரும் பட்சத்தில் நசரேயன் அவர்கள் சொன்ன பிலாக் ஸ்பிலிட்டர் அருமையாக உதவுகிறது.200+ பதிவுகள் இருக்கும் என் பிலாக்கை இம்போர்ட் செய்ய சுமார்11 நிமிடங்கள் ஆனது பாருங்கள்.


தேவைப்படுபவர்கள் நசரேயன் பதிவைப் போய்ப் பாருங்கள்.how to import larger blogஎப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடியும்னு சொல்லுவது போல என் பதிவும் நல்லதே செய்திருக்கிறது.

டிஸ்கி:1. சந்தேகம்.கூகிள் ரீடரில் இருப்பதை போஸ்ட் செய்தால் பின்னூட்டம் தெரியாது சரி.ஆனால் அது புதுப் பதிவாக இருக்குமா இல்லை முன்பு பதிவிட்டிருந்த பழைய தேதியில் இருக்குமா? மீள் பதிவாகத்தானே இருக்க முடியும்.
சந்தேகம்2. இப்போதுள்ள நம் ஒரிஜினல் பிலாக்கிலிருந்து கூட்டுப் பதிவிற்காக நமக்கு நாமே அனுமதி வழங்கி வேறொரு ஐடியிலிருந்து திறக்கும் போது  பதிவு முடங்கினாலும் அந்த ஐடியில் இருந்து மீட்க முடியுமா?முடியாதுதானே?

0 கருத்துகள்:

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and