பிலாக்கரில் ஏற்றுமதியும் இறக்குமதியும்

செவ்வாய், பிப்ரவரி 9

மீபமாக தமிழ்ப் பிரியன்,சந்தன முல்லை இன்னும் சிலரது வலைப் பக்கங்களை கூகிள் ஸ்வாஹா பண்ணிடுச்சுன்னு கேள்விப்பட்டிருப்போம்.இதுல சந்தன முல்லை வலை திரும்பக்கிடைச்சிடுச்சு.தமிழ்ப் பிரியன் புதுசா பிலாக் ஆரம்பிச்சு ரீடரில் சேமித்து வைத்ததை காபி பேஸ்ட் பண்ணி மீள் பதிவு போடுகிறார்.[ம்ம் இந்த கூகுள் கூட பொம்பளைங்கன்னா பயப்படுதே:))]

பல தொழில்நுட்ப வலைபக்கங்களில் முழு பிலாக்கையும் சேமிக்கவும் மீண்டும் தரவிறக்கம் செய்யவும் முடியும்னு படித்திருக்கிறேன்.அதாவது ஏற்றுமதி இறக்குமதி போல.பிலாக்கின்
செட்டிங்ஸ்ல் பகுதியில் கீழே படத்தில் உள்ளது போல இருக்கும்.


எக்ஸ்போர்ட் பிலாக் என்பதைக் கிளிக் செய்து,தரவிறக்கினால் நம்முடைய கணிணியில் சேமித்துக் கொள்ளலாம்.பின்னர் வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியில் உள்ள பிலாக்கிற்கு இம்போர்ட் செய்ய முடியும்.இதனால் தொழில்நுட்பக் காரணங்களால் நம்முடைய பிலாக் முடங்கிப் போனால் புது முகவரியில் புதுப் பொலிவுடன் ஹாய்யாக மீண்டு வரலாம்.தமிழ்ப் பிரியன் போல கஷ்டப்பட வேண்டாம்.


இது பொரும்பாலானவருக்குத் தெரிந்தது தானே.நீயெல்லாம் தொழில் நுட்ப பதிவு எழுதும் அளவுக்கு பெர்ர்ர்ரிய ஆளா? ன்ன்னு மனசுக்குள்ள நெனைப்பது மைண்ட் ரீடிங்கில் தெரியுது.விஷயம் அது இல்லை.எதற்கும் உஷாராக என் பிலாக்கை ஏற்றுமதி செய்து சேமித்து விட்டேன் ஆனால் கோளாறே இறக்குமதியில்தான்.


Sorry, the import failed due to a server error. The error code is bX-qm5h6h

ஒவ்வொருமுறையும் இப்படி எர்ரர் மெசேஜ் வந்து தடைப்பட்டு விட்டது.சரி எப்படியும் 200 க்கு மேல் இடுகைகள் இருப்பதால்தான் கோளாறுன்னு தோணுச்சு.ஆனாலும் 2 வது படியில் பின்னூட்டங்கள் இறக்குமதியாகும் போதுதான் தடைப்பட்டு நின்றுவிடும்.வலையில் வலை போட்டு உதவி தேடிய போது என் யூகம் சரிதான்னு பதில் கிடைத்ததும் கொஞ்சம் மாற்றி முயற்சித்தேன்.
ஏற்றுமதி செய்த வலைப்பக்கம்.xml பைலாக சேமிக்கப்பட்டிருக்கும்.அதை ஓப்பன் செய்யும்போது இண்டர்நெட் எக்ஸ்புலோரர் அல்லது தீநரி[நாம் உபயோகிக்கும் உலாவியில்] திறக்கப்படும்.பதிவுகள் பின்னூட்டங்கள் டெம்ப்லேட் கோடிங் என நம் வலைப்பக்கத்தின் மொத்தத் தலையெழுத்தும் அதில் இருக்கும்.

ஆனால் அதை எடிட் செய்ய முடியாது என்பதால் அதன் சோர்ஸ் கோடை நோட்பேடில் திறந்து எடிட் செய்யத் தொடங்கினேன்.அம்ம்ம்மாடீயோவ்.சட்டுனு ஸ்க்ரோல் ஆகாது.முழுமையாக செலக்ட் செய்து அழிக்க நினைத்தால் பதிவுகளும் அழிந்து விடும் என்பதால் கொஞ்சம்கொஞ்சமாக பின்னூட்டங்களை மட்டும் டெலிட் செய்தேன்.

படத்தில் உள்ளது போல ஆரம்பத்தில் டெம்ப்லேட் கோடிங்கும் இதுவரை நாம் எழுதியுள்ள மொத்த இடுகைகளும் வந்துவிடுகிறது.பிறகுதான் பின்னூட்டம் ஆரம்பிக்கிறது.அதனால் கீழிருந்து மேலாக செலக்ட் செய்து அழித்துக் கொண்டே வந்து என்னுடைய முதல் முதல் அறிமுகப் பதிவு வரை வந்து சேவ் செய்து விட்டேன்.பிறகு வேறொரு பிலாக்கில் பின்னூட்டங்களே இல்லாமல்:(( இறக்குமதி செய்தேன்.வாவ்வ்!!!
எல்லாப் பதிவுகளும் இருந்தன.மிகக் குறைவான இடுகைகள் கொண்ட இன்னொரு வலைப்பக்கம் எந்த சிரமமும் இல்லாமல் தரவேற்ற/இறக்க முடிந்தது.அதில் பின்னூட்டங்களும் குறைவு.
அதிக எண்ணிக்கையில் பதிவுகளும் பின்னூட்டங்களும் கொண்ட வலைப்பக்கத்தைச் சேமிக்க இந்த வழியைத்தான் பின் பற்ற வேண்டும்.?
ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெறமுடியும்.
பதிவுகளா?பின்னூட்டங்களான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கிடுங்க.
ஒருவேளை என் முயற்சி தலைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையா?இதைவிட வேறு வழியில் எர்ரர் மெசேஜ் வராமல் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியும் என்பவர்கள் பதிவிடுங்கள்.ஏதோ ஒரு வழியில் உங்கள் வலைப் பக்கத்தை இன்ஸ்யூர் செய்து [லாக்கரில்]வைத்து விடுங்கள்.அப்பால காக்கா தூக்கிப் போனதும் வடை[லை] போச்சேன்னு தமிழ்ப் பிரியன் போல புலம்பக்கூடாது.

டிஸ்கி:    என் அனுபவங்களை வைத்து [கணிணி அறிவுன்னு சொல்லலை]
நானும் தொழில்நுட்பப் பதிவு
போடப் போறேன்
போடப்போறேன்
போடப் போறேன்[வடிவேலுஸ்டைல்]
          
டிஸ்கி: என்னுடைய சிக்கலுக்கு உடனடியாக தீர்வு கிடைத்துவிட்டது.அதை பிலாக்கர் இறக்குமதி எளிதாகிவிட்டது இந்த பதிவில்சொல்லியிருக்கேன் பாருங்க

3 கருத்துகள்:

  1. ANOKARAN சொன்னது…:

    மிகவும் நல்ல பதிவு நன்றி தொடர்க... வாழ்த்துக்கள்.

  1. salemyaserbilali சொன்னது…:

    ப்ளாக்கில் புத்தகங்களை படிக்கும் வண்ணம் எப்படி இனைப்பது மேலும் அதை பதிவிறக்கம் செய்யும் optionஐ எவ்வாறு இனைப்பது

  1. salemyaserbilali சொன்னது…:

    ப்ளாக்கில் புத்தகங்களை படிக்கும் வண்ணம் எப்படி இனைப்பது மேலும் அதை பதிவிறக்கம் செய்யும் optionஐ எவ்வாறு இனைப்பது

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and