இரகசியமாய்....ஒரு பதிவு

வெள்ளி, ஏப்ரல் 2

முந்தைய ஒரு பதிவில் பிலாக் போஸ்ட்டுக்கு எப்படி பாஸ்வேர்டு செட் செய்யலாம் எனச் சொல்லியிருந்தேன்.பதிவுகளை என்கிரிப்ட் செய்து பதிவிடுவதால் பாஸ்வேர்டு கொடுத்தால் மட்டுமே பதிவு ஓப்பன் ஆகும்.டெமோவிற்கு
இங்கு பார்க்கவும்.

டெமோ பதிவில் பாஸ்வேர்டு கொடுத்திருப்பது போல குறிப்பிட்ட பதிவுக்கான கடவுச் சொல் தெரிந்தவர்கள் பதிவை ஓப்பன் செய்து படிக்கலாம்.

கவனிக்க வேண்டியவை:
1.என்கிரிப்ட் மற்றும் டீகிரிப்ட் செய்யும் போது தேர்வு செய்யும் பாஸ்வேர்டு மட்டுமே வேலை செய்யும்.
2.ஒவ்வொரு பதிவுக்கும் என்கிரிப்ட் செய்யும்போது தனித் தனி பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும்.ஒரே அடையாளமுள்ள பாஸ்வேர்டையும் பயன் படுத்தலாம்.அல்லது வேறு வேறும் பயன் படுத்தலாம்.
3.யாருக்கு [நண்பர்] எந்த பாஸ்வேர்டு கொடுக்கிறோமோ அந்தக் குறிப்பிட்ட பதிவை மட்டுமே அவர்கள் படிக்க முடியும்
4.பதிவுகளை பத்தி பிரித்து எழுத முடியாது.படம் சேர்க்க முடியாது.

இனி எப்படி எழுதுவது எனப் பார்ப்போம்.

1).முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஜாவா ஸ்கிரிப்ட் டீ கிரிப்ஷன் கோடு (JavaScript decryption code)ஐ காபி செய்து உங்க பிலாக் html ல் <head> and </head>க்கு இடையில் பேஸ்ட் செய்யவும்.

<script type="text/javascript" src="http://www.vincentcheung.ca/jsencryption/jsencryption.js"></script>


இதைச் செய்தால் மட்டுமே பதிவை பாஸ்வேர்ட் கொடுத்து திறக்க முடியும்.இல்லாவிட்டால் கள்ளச் சாவி போட்டு லாக்கரைத் திறக்க முயற்சிப்பது போல ஆயிடும்:((((

2).

அடுத்து இந்தப் பக்கத்தை திறந்தால் கீழே படத்தில் உள்ளது போல
rel= பக்கம் திறக்கும்.அங்குள்ள பெட்டிகளில் இப்படியிருக்கும்

KEY:பாஸ்வேர்ட் கொடுக்கவும்.ஆங்கிலதான் கொடுக்கனும்.(கேஸ் சென்சிடிவ்)

plain Text:தமிழில் எழுதலாம்.நம் பதிவை இங்குதான் எழுதனும்.எழுதி முடித்தவுடன் select பட்டனை அழுத்தி முழுவதும் செலக்ட் செய்து விட்டு encrypt பட்டனை அழுத்தவும்

Cipher Text:இப்போது இங்கு மறைகுறியீடு செய்யப்பட்ட பதிவு தெரியும்.இதை ஒன்றும் செய்ய வேண்டாம்.இது Html Code ஆக மாற்றப் பட்டு கிடைக்கும்.வேண்டுமானால் இதை செலக்ட் செய்து டீகிரிப்ட் பட்டன் அழுத்தினால் நம் பதிவு தெரியும்.இது ச்சும்மா கிராஸ் செக்கிங்.

Html Code:இங்கு பதிவு என்கிரிப்ட் செய்ததன் Html Code கிடைக்கும்.இதைத்தான் நாம் பதிவில் காபி பேஸ்ட் செய்யனும்.இதில் எந்த மாதிரி வேனும்னு ஆப்ஷன் இருக்கு.

இந்த சாம்பிள் பதிவு பாருங்க:
rel=அல்லது இப்படியும் கொடுக்கலாம்

Show encrypted text
There is hidden text here


"Show encrypted text" என்பது மட்டும்தான் தான் நம் பதிவில் தெரியும். கடவுச் சொல் கொடுப்பவருக்கு மட்டும் பதிவு திறக்கும்.

4 கருத்துகள்:

 1. க.பாலாசி சொன்னது…:

  என்னன்னமோ சொல்றீங்க... என்னன்னமோ செய்றீங்க... எப்டிங்க இவ்ளவும் கத்துகிட்டீங்க...

  நன்றிங்க்கா....

 1. க.பாலாசி சொன்னது…:

  சாரிங்க வாழ்க்கையில முதல்முதலா ஒரு தப்பு பண்ணிட்டேன்... ப்ளஸ் ஓட்டு போடுறதுக்கு பதிலா மைனஸ் ஓட்ட போட்டிட்டேன்... மன்னிச்சுடுங்க.... தெரியாம நடந்திடுச்சு...

 1. சசிகுமார் சொன்னது…:

  நல்ல பதிவு தோழி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and